ADDED : மே 10, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 77. தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக, தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மினி வேன் மோதி, துாக்கி வீசப்பட்ட பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து பயந்துபோன ஓட்டுனர், வாகனத்தை விட்டு விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.