/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடமாநிலத்தைச் சேர்ந்த வழிப்பறி ஆசாமிக்கு 'குண்டாஸ்'
/
வடமாநிலத்தைச் சேர்ந்த வழிப்பறி ஆசாமிக்கு 'குண்டாஸ்'
வடமாநிலத்தைச் சேர்ந்த வழிப்பறி ஆசாமிக்கு 'குண்டாஸ்'
வடமாநிலத்தைச் சேர்ந்த வழிப்பறி ஆசாமிக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 27, 2024 12:24 AM

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், கணேஷ்நகரை சேர்ந்தவர் பத்மாவதி, 61. இவர் கடந்த ஏப்., மாதம் சாலையில் நடந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை, பைக்கில் வந்த மர்மநபர்பறித்து சென்றார்.
இதுகுறித்து, ஆதம்பாக்கம்போலீசார் விசாரணையில் மஹாராஷ்டிரா மாநிலம், கான்பூர் பாட்டாவை சேர்ந்த அமோல், 32, என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவர் பல இடங்களில் வழிப்பறி செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.