தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துப்பாக்கி முனையில் தாக்குதல் மர்ம கும்பலுக்கு வலை

துப்பாக்கி முனையில் தாக்குதல் மர்ம கும்பலுக்கு வலை

துப்பாக்கி முனையில் தாக்குதல் மர்ம கும்பலுக்கு வலை


ADDED : ஆக 03, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 05:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வளசரவாக்கம்: ‘ஆன்லைன் ஷாப்பிங்’ நிறுவன டெலிவரி ஊழியரை வழிமறித்து, துப்பாக்கி முனையில் தாக்கி மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

போரூர் அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷன், 24. இவர், ‘அமேசான்’ எனும் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிகிறார்.

இவர், காரம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வினியோகம் செய்யச் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர்.

அவர்கள் பிரியதர்ஷனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, கைகளால் தாக்கியுள்ளனர். வலி தாங்காமல் பிரியதர்ஷன் அலறவே, சத்தம் கேட்டு பகுதி மக்கள் திரண்டதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

காயமடைந்த பிரியதர்ஷன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி முயற்சியா அல்லது முன்விரோதத்தால் நடந்த தாக்குதலா என விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us