/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹண்டே எழுதிய நுால்கள் இன்று வெளியீடு
/
ஹண்டே எழுதிய நுால்கள் இன்று வெளியீடு
ADDED : ஆக 27, 2024 12:13 AM
சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே எழுதிய, இரண்டு நுால்கள் இன்று வெளியிடப்படுகின்றன.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே எழுதிய இரண்டு நுால்கள், இன்று காலை, 10:00 மணிக்கு, ஆர்.ஏ.புரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரியில் வெளியிடப்படுகின்றன.
எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியால் நமது அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ற ஆங்கில நுாலை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் பெற்றுக் கொள்கிறார். 'சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்' என்ற நுாலை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் பெற்றுக்கொள்கிறார்.

