ADDED : ஜூலை 19, 2024 12:09 AM
ஆன்மிகம்
ஆடி வெள்ளி: அபிஷேகம், காலை 8:00 மணி. சிறப்பு அலங்காரம், அன்னதானம் - மாலை 6.45 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரனை.
* உபன்யாசம்: பாரத ரகசியங்கள் - நிகழ்த்துபவர்: எம்.வி.பத்மநாபாச்சாரியார், மாலை 6:00 மணி. இடம்: ராம் சீதா ஹால், எஸ்.பி.ஐ.காலனி, 2வது தெரு, ராஜ கீழ்ப்பாக்கம்.
* பிரதோஷம்: சிவன், நந்தியம் பெருமாளுக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் பவார்த்த அபங்க பஜன், உபன்யாசம், நேரம்:மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார், தொடர்புக்கு: 98412 27709, 94450 51015
முத்தமிழ் விழா
மணவழகர் மன்றத்தின் 68ம் ஆண்டின் முத்தமிழ் விழா - மாலை 5:30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வேதவல்லித் தாயாா் சேஷ வாகன புறப்பாடு, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
பிரதோஷம் முன்னிட்டு, நந்தியம் பெருமாள், பிரதோஷ நாயகர் அபிஷேகம், ஆடி வெள்ளி முன்னிட்டு சோமஸ்கந்தர் யாகசாலை எழுந்தருளல், மாலை 4:30 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.
ஆண்டவர் கோவில்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மாலை 5:30 மணி சொற்பொழி மற்றும் கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: வடபழனி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
பொது
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.