ADDED : ஏப் 21, 2024 12:00 AM
ஆன்மிகம்
சித்திரை பெருவிழா
காலை 10:30 -- 11:00 மணிக்கு திருஞானசம்பந்தரும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளல், மாலை 6:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்காட்சி. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை.
சிவபாத இருதயரும் திருஞானசம்பந்தரும் கோபதிசரஸ் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளல், -காலை 10:30 மணி; புஷ்பக விமானத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்காட்சி, -மாலை 6:00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில் சைதாப்பேட்டை.
புனராவர்த்த அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா: காலை 5:00 ---- மதியம் 1:00 மணி வரை. இடம்: ஸ்ரீ ஆதிசிவப்பிரகாச சுவாமிகள் திருமடம், செம்பாக்கம், செங்கல்பட்டு.
நாமசங்கீர்த்தனம்: பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம், நிகழ்த்துபவர் - ஹைதராபாத் டாக்டர் ஸ்ரீ சிவா குழுவினர். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை - 600 044.
ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம்: காலை 8:30 - 11:55 மணிக்கு சீதா கல்யாண மஹோத்சவம், இரவு 7:30 - 8:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம். இடம்: ராமகான பஜனை சபா, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, பல்லாவரம் - 43.
லலிதா ஸஹஸ்ரநாம குழு சார்பாக கம்ப ராமாயணம் சொற்பொழிவு: மாயமான். மாலை 6:00 - 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆஸ்ரமம், பேபிநகர், வேளச்சேரி .
பெருமாளுக்கு திருவாராதனம், -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம்-, மாலை 6:00 மணி. செல்வர் பல்லக்கு புறப்பாடு, -இரவு 8:45 மணி. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் பிரதோஷ வழிபாடு-, மாலை 4:30 மணி. கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா எட்டாம் நாள்-, இரவு 7:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
கும்பாபிஷேகம்
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், காலை 9:15 - 11:16 மணி வரை. இடம்: ஐ.ஓ.பி., காலனி, கிழக்கு தாம்பரம், சேலையூர்.
திவ்ய நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம், காலை 8:00 மணி முதல், பவளிம்பு உற்சவம், இரவு 7:00 - 10:00 மணி வரை. இடம்: சக்தி விநாயகர் கோவில், மெட்ரோ நகர், ஆலப்பாக்கம்.
இசை நிகழ்ச்சி
மடிப்பாக்கம் காமெடி கிளப் சார்பில், 'எவர் கிரீன் மெலடீஸ்' இசை நிகழ்ச்சி, -மாலை 5:00 மணி. இடம்: சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளி, மடிப்பாக்கம்.
