/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரிமுனையில் ரூ.27 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
/
பாரிமுனையில் ரூ.27 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
ADDED : ஜூன் 09, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிமுனை:பாரிமுனையில் போலீசார் நேற்று வடக்கு கடற்கரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த மண்ணடியை சேர்ந்த சதாம் உசேன், 25 என்ற வாலிபரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தால், அவரது பையை சோதனையிட்டனர். அதில், கட்டு கட்டாக பணம் இருந்தது. விசாரணையில், பர்மா பஜாரில் வேலை செய்து வருவது தெரியவந்தது.
அவரிடமிருந்த 27 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.