/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாங்கியவரை எழுப்பியதில் பாட்டிலால் தாக்கி கொலை
/
துாங்கியவரை எழுப்பியதில் பாட்டிலால் தாக்கி கொலை
ADDED : மே 31, 2024 12:18 AM
கோயம்பேடு : பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 48. இவர் கோயம்பேடு சந்தையில் தங்கி, டிபன் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, கடையில் மது போதையில் துாங்கினார். அப்போது, கோயம்பேடு கீரை சந்தையில் வேலை செய்யும், நெற்குன்றம் தாமரை அவென்யூவை சேர்ந்த சக்தி, 22, என்பவர் மதுபோதையில் தன் நண்பரை பார்க்க சந்தைக்கு சென்றார்.
அப்போது, நண்பரை எழுப்புவதற்கு பதிலாக குடிபோதையில் துாங்கிக் கொண்டிருந்த சேகரை எழுப்பினார். ஆத்திரமடைந்த சேகர், சக்தியை ஆபாசமாக திட்டினார். கோபமடைந்த சக்தி, அருகில் கிடந்த பீர் பாட்டிலால் சேகரின் தலையில் தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிய சேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார்.
சக்தியை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.