/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஆக 07, 2024 12:57 AM

ராமாபுரம், போரூர் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மேலும், போரூரில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இச்சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இச்சாலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
அத்துடன், சாலையோரம் மண் திட்டுகள் உருவாகியுள்ளன. இவை, மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறுவதால், பிரச்னை ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறிய இந்த சாலையில், தற்போது புழுதிபறக்கிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கண்களில் புழுதி பட்டு, எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் உள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.