ADDED : மே 08, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெரினா,ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் ஏல்க்ஹான், 38. இவர், கடந்த டிசம்பரில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்து புதுடில்லி, கோவா சென்றுவிட்டு, சில நாட்களுக்கு முன் ரயிலில் சென்னை வந்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன், விவேகானந்தர் இல்லம் அருகில் மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.
அப்போது, நான்கு பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கி, மொபைல்போனை பறித்து தப்பினர். இது குறித்து, மெரினா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அண்ணாநகரைச் சேர்ந்த வெற்றி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

