ADDED : மார் 09, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் உள்ள அபிராமி அம்மன் கோவில் வழிபாட்டை முன்னிட்டு அம்மனை வழிபாடு செய்ய இருந்த பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் என, 80 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சி சார்பில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேர்தல் அலுவலகம் முன் நேற்று மாலை, விருகம்பாக்கம் துணை தலைவர் லோகேஷ் தலைமையில், 12 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி பெறாததால், கோயம்பேடு போலீசார் அவர்களை கைது செய்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.