/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தயக்கம் என்ற குணத்தில் இருந்து ஹிந்து சமூகம் வெளிவர வேண்டும் அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள்
/
தயக்கம் என்ற குணத்தில் இருந்து ஹிந்து சமூகம் வெளிவர வேண்டும் அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள்
தயக்கம் என்ற குணத்தில் இருந்து ஹிந்து சமூகம் வெளிவர வேண்டும் அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள்
தயக்கம் என்ற குணத்தில் இருந்து ஹிந்து சமூகம் வெளிவர வேண்டும் அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள்
ADDED : மே 05, 2024 12:27 AM

மேற்கு மாம்பலம், ஸ்ரீ சங்கர 2,533வது ஜெயந்தியை முன்னிட்டு, மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் ஜகத்குரு வேத பாராயண டிரஸ்ட் சார்பில், சகஸ்ர சண்டி மகாயக்ஞம் கடந்த 2ம் தேதி காலை 7:30 மணிக்கு குருவந்தனத்துடன் துவங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.
அதேபோல, கடந்த 3ம் தேதி முதல் தினமும் மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நாடகம், உபன்யாசம் நடக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு கூடலி சிருங்கேரி மடத்தின் 72வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள் இங்கு வருகை தந்தார்.
அதற்கு முன், மேற்கு மாம்பலம், உமாபதி தெரு விரிவாக்கம் பகுதியில் உள்ள கோல்கட்டா காளி கோவிலுக்கு வந்த மஹா சுவாமிகளுக்கு, அங்கிருந்து அயோத்தியா மண்டபம் வரை, பட்டண பிரவேஷம் மற்றும் ேஷாபா யாத்திரை நடந்தது.
பின், அவர் பேசியதாவது:
அயோத்திய மண்டபம் குறித்து பல நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை கேட்டுள்ளேன். இதற்கு காரணம், நமக்கு தயக்கம் என்ற குணம் வந்துள்ளது. பண்டை காலத்தில் நாட்டில் ஒவ்வொருவரும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில், 'இவர்கள் ஒன்று சேர்ந்தால் நம் கதை என்ன ஆகும்' என, தனி நபர் ஆயுதம் வைத்திருக்க கூடாது என, சட்டம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, பல தலைமுறைகள் கடந்து நமக்கு ஆயுதம் பயன்படுத்த தெரியாமல் உள்ளோம். தற்காப்பு செய்ய தெரியாமல் உள்ளோம்.
அதேபோல், 'யாராவது ஒருவர் வருவார்; ஏதாவது செய்வார்; அப்போது எல்லாம் சரியாகி விடும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் உள்ளது. இதற்கான காரணம், நம்மால் ஏதும் செய்ய முடியாது' என்ற எண்ணத்திற்கு நாம் வந்து விட்டோம்.
எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்ற பயிற்சியும் இல்லை. இதுபோன்ற தயக்கம் நம் ஹிந்து சமூகத்திற்கு வந்துள்ளது. அதில், இருந்து நாம் வெளி வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.