/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி லீக்: சென்னை - துாத்துக்குடி 'டிரா'
/
ஹாக்கி லீக்: சென்னை - துாத்துக்குடி 'டிரா'
ADDED : ஆக 31, 2024 12:08 AM

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி லீக் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது. போட்டியில், சென்னை, மதுரை உட்பட ஆறு பள்ளி அணிகளும், ஆறு மண்டல இணைப்பு அணிகளும் பங்கேற்றுள்ன.
இதில், 12 அணிகளும், நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் மோதி வருகின்றன. நேற்று காலை நடந்த முதல் போட்டியில், பாளையங்கோட்டை அப்துல் ரகுமான் பள்ளி அணி மற்றும் சேலம் மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன.
அதில், 2 - 0 என்ற கோல் கணக்கில், பாளையங்கோட்டை அப்துல் ரகுமான் பள்ளி அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், அரியலுார் அரசு பள்ளி அணி, 6 - 3 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் மண்டல இணைப்பு அணியை வீழ்த்தியது.
சென்னை மண்டல இணைப்பு அணி மற்றும் துாத்துக்குடி மண்டல இணைப்பு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.