ADDED : ஜூலை 28, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'வீ ஆர் பார் ஹாக்கி' அமைப்பு சார்பில், நான்காம் ஆண்டிற்கான வீ ஆர் பார் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி போட்டி, எழும்பூரில் நடக்கிறது. 16 அணிகள் மோதுகின்றன.
நேற்று காலை நடந்த லீக் ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பொறியியல் அணி மற்றும் மேஜர் ஜான்ஸ் ராபர்ட் அகாடமி மோதியது. அதில், 5 - 2 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.
இதுவரை நான்கு பிரிவுகளில் நடந்த அனைத்து 'லீக்' போட்டிகளின் முடிவில், 'ஏ' பிரிவில், ஈரோடு பி.கே.ஆர்., அணி; 'பி' யில், ஆர்.வி., அகாடமி; 'சி'யில் எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி; 'டி' பிரிவில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி அணிகள், அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றன.