/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து துணை நடிகையை மிரட்டி பலாத்காரம்: 6 பேர் கைது
/
வீடு புகுந்து துணை நடிகையை மிரட்டி பலாத்காரம்: 6 பேர் கைது
வீடு புகுந்து துணை நடிகையை மிரட்டி பலாத்காரம்: 6 பேர் கைது
வீடு புகுந்து துணை நடிகையை மிரட்டி பலாத்காரம்: 6 பேர் கைது
ADDED : மே 31, 2024 12:49 AM
வளசரவாக்கம், வீட்டிற்குள் புகுந்து துணை நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த 30 வயது பெண், 'டிவி' தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி, சினிமாவிலும் துணை நடிகையாக நடித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த இவரது உறவினர் வேலை விஷயமாக ஹைதராபாத் சென்ற நிலையில், துணை நடிகை மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் ஆறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களில் இருவரை வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு, பிரபல நடிகரிடம் கார் டிரைவராக வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி சென்றதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த வளசரவாக்கம் போலீசார், வளசரவாக்கம் ஜெய்நகரை சேர்ந்த முருகேசன், 27, செங்கோட்டையை சேர்ந்த கல்யாணகுமார், 28, நெல்லையை சேர்ந்த அருண்பாண்டி, 23, மாரியப்பன், 23, பெரிய நம்பி ராஜ், 27, முப்பிடாதி, 26 ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.