/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓடும் ரயிலில் நகை திருட்டு ஓசூர் சகோதரிகள் சிக்கினர்
/
ஓடும் ரயிலில் நகை திருட்டு ஓசூர் சகோதரிகள் சிக்கினர்
ஓடும் ரயிலில் நகை திருட்டு ஓசூர் சகோதரிகள் சிக்கினர்
ஓடும் ரயிலில் நகை திருட்டு ஓசூர் சகோதரிகள் சிக்கினர்
ADDED : செப் 04, 2024 01:35 AM

சென்னை:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி, 57. இவர் கடந்த மாதம் 7ம் தேதி காலை தாம்பரம்செல்ல, சைதாப்பேட்டை நிலையத்தில் ரயில் ஏறினார்.
அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 கிராம் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரின்படி, மாம்பலம் ரயில்வே போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இரு பெண்கள் மீது சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு பெண்களை பிடித்த போலீசார், மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து என்ற ரேகா, 33, பேச்சி என்ற கண்மணி, 36, என்பதும், வாசுகியிடம் நகை திருடியதும் தெரிந்தது.
சகோதரிகளான இவர்கள், வயதான பெண்களை குறிவைத்து, அவர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல வகையில் கவனத்தை திசை திருப்பி, திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அதாவது, 'ஷால்' துணியை மற்றவர்களின் முகத்தில் துாக்கி வீசி, அவர்களின் கவனத்தை திசைதிருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் நகைகளை திருடுவது உள்ளிட்ட நுாதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, 12 கிராம் தங்க கட்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.