/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மனிதநேயம்' மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் அபாரம்
/
'மனிதநேயம்' மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் அபாரம்
'மனிதநேயம்' மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் அபாரம்
'மனிதநேயம்' மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் அபாரம்
ADDED : ஜூலை 03, 2024 12:30 AM
சென்னை,
யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற, 42 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம், 2005ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதுவரை, 3,865க்கும் மேற்பட்ட உயர் பதவிகள் மற்றும் குரூப் - 4 தேர்வில் 40,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் வெற்றி பெற்று, பல்வேறு அரசு துறைகளில் பணி புரிகின்றனர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம், 2024ம் ஆண்டுக்கான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 1,056 காலி பணியிடங்களை நிரப்ப, பிப்., 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று, முதன்மை தேர்வுக்கு தேர்வானவர்கள் பட்டியல் நேற்று வெளியானது.
எங்கள் மையத்தில் பயிற்சி பெற்ற, 30 மாணவர்கள், 12 மாணவியர் என, 42 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான நேரடி வகுப்புகள், பாடக்குறிப்புகள், வல்லுனர்கள் மற்றும் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவுச் சீட்டுடன், இன்று முதல் சி.ஐ.டி.,நகர், மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா பயிற்சி மையத்தில் நேரில் வரவும்.
மேலும், 044 -2435 8373 என்ற எண்ணிலோ அல்லது www.mntfreeias.com என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்யலாம் என, மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி கூறினார்.