ADDED : ஜூன் 19, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டில்லிராணி, 33, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், முதல்நிலை காவலர். கணவர் மேகநாதனிடம், 38, ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், டில்லிராணியை வழிமறித்து, அவரது கணவர் மேகநாதன் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த டில்லிராணி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
மேகநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.