/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'
/
'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'
'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'
'நானும் ரவுடி தான்' ஆசையில் அடாவடி: 9 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 04, 2024 12:32 AM
திரு.வி.க.நகர், பெரம்பூர் பகுதியில் 'நானும் ரவுடி தான்' என்ற போர்வயைில் நவீன்குமார் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் கமலேஷ் என்பவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி கமலேஷிடம் வீண் தகராறில் ஈடுபட்ட நவீன்குமார் அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த திரு.வி.க.நகர் போலீசார் நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாமினில் வந்த நவீன்குமார், நண்பர்கள் புடைசூட கமலேஷ் வீட்டிற்கு சென்று 'கெத்து' காட்ட நினைத்துள்ளார்.
ஆனால் அங்கு கமலேஷ் இல்லாததை அறிந்து ஏமாற்றமடைந்தார். மேலும், அவரது தாயிடம் கமலேைஷ கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர்.
மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது தாய் அளித்த புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் கும்பலாக சென்று கொலை முயற்சியில் ஈடுபட்ட நவீன்குமார், 19, தீபக் உள்ளிட்ட ஒன்பது பேரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.