/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நான் முதல்வன்' முகாம் நாளை முதல் துவக்கம்
/
'நான் முதல்வன்' முகாம் நாளை முதல் துவக்கம்
ADDED : செப் 08, 2024 12:21 AM
சென்னை, சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அரசு மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் இடைநின்ற மாணவர்கள், உயர்கல்விக்கு சேருவதற்காக, 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' திட்டத்தில், சிறப்பு வழிகாட்டி முகாம் நடக்கிறது.
அதன்படி, மத்திய வருவாய் கோட்டத்திற்கு உட்பட பெரம்பூர், எழும்பூர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அயனாவரம், அமைந்தகரை, புரசைவாக்கம், கொளத்துார் ஆகிய பகுதி மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., நகர் அரசு பள்ளியில், நாளை முதல் 19ம் தேதி வரை முகாம் நடக்கிறது.
வடக்கு வருவாய் கோட்டமான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், மணலி, ராயபுரம் ஆகிய பகுதிக்கு உட்பட மாணவர்களுக்கு, திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில், வரும் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
தெற்கு வருவாய் கோட்டமான அடையாறு, கிண்டி, சோழிங்கநல்லுார், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதி மாணவர்களுக்கு, சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் வரும் 18ல் துவங்கி, 26ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
உயர்கல்வி சேர முடியாத மாணவர்கள், இதை பயன்படுத்தி உயர்கல்வி தொடரலாம் என, சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.