/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருக்குறளை படித்தால் வாழ்க்கையில் உயரலாம்
/
திருக்குறளை படித்தால் வாழ்க்கையில் உயரலாம்
ADDED : ஜூலை 02, 2024 12:07 AM
சென்னை, தேஜஸ் பவுண்டேஷன் சார்பில், 'குரு அருளும் திருக்குறளும்' எனும் நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஒய்.எம்.ஐ.ஏ., அரங்கில், நேற்று நடந்தது.
விழாவில், 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசியதாவது:
பிற உயிர்களுக்கு தீங்கு இழைப்பது மிகப்பெரிய பாவம் என்கிறது திருக்குறள். கொல்லாமையை வலியுறுத்தி, காஞ்சி சங்கர மடத்தில் இருந்து திருக்குறள் உரை நுால்கள் வெளியாகி உள்ளன. ஒரு நல்ல குரு, தன் சிஷ்யனை நண்பர் போல் வழி நடத்துவார்.
உலகின் முதல் குருவாக போற்றப்படும் கிருஷ்ண பரமாத்மா, மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு நல்ல நண்பனாகவும், குருவாகவும், தர்மத்திற்காக குரல் கொடுத்து பகவத் கீதையைத் தந்தவர்.
தமிழகத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகிய ஆதீனங்கள் வாயிலாக, திருக்குறளுக்கு 75 ஆண்டுகளுக்கு முன், உரை நுால்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மருத்துவர் பாஸ்கர் பேசுகையில், ''குரு என்பவர், நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் வாயிலாக பெரும் கல்வி, நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. திருக்குறளை முறையாக படித்தால், வாழ்க்கையில் பல புதிய சாதனைகளையும், உயரத்தையும் எட்ட முடியும்,'' என்றார்.
விழாவில், பேராசிரியர் ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.