/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாமானியர் போல வரிசையில் வந்த ஐ.ஜி., பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'ரெய்டு'
/
சாமானியர் போல வரிசையில் வந்த ஐ.ஜி., பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'ரெய்டு'
சாமானியர் போல வரிசையில் வந்த ஐ.ஜி., பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'ரெய்டு'
சாமானியர் போல வரிசையில் வந்த ஐ.ஜி., பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'ரெய்டு'
ADDED : ஜூலை 23, 2024 12:25 AM
சென்னை, தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத்துறை உயரதிகாரிகள் திடீரென ஆய்வு செய்வது வழக்கம். அதிகாரிகள் அரசு வாகனங்களில், உதவியாளர்கள் புடைசூழ ஆய்வுக்கு செல்லும் போது, அங்குள்ள சார் - பதிவாளர்கள் உஷார் ஆகிவிடுவர்.
இதற்கு மாறாக, கடந்த சனிக்கிழமை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு சாதாரண பொது மக்கள் போல சென்றுள்ளார்.
சார் - பதிவாளரை சந்திக்க, அவரது அறைக்கு சென்ற போது, அங்கு சார் - பதிவாளர் இல்லை.
ஆனால், அங்கு சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருந்த பணியாளர்கள், வந்திருப்பது யார் என்று அடையாளம் தெரியாமல், தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தடுத்துள்ளனர்.
வெளியில் வரிசையில் காத்திருக்கும்படி, கட்டளையிட்டுள்ளனர். அமைதியாக திரும்பி, பொதுமக்களின் வரிசையில் ஐ.ஜி., காத்திருந்து உள்ளார்.
பின் வந்திருந்தவர் ஐ.ஜி., என தெரிந்ததும், சார் - பதிவாளர் அறையில் சுதந்திரமாக நடமாடிய நபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். விசாரித்ததில் ஆவண எழுத்தர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர், சார் - பதிவாளர் அறையில் நடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் குறித்தும், அங்கு பதிவாகும் அனைத்து பத்திரங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.
மேலும், பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும், குறிப்பிட்ட சில நாட்களில் அங்குள்ள கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

