ADDED : ஜூலை 17, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
சென்னை: அடையாறு மண்டலத்தில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 30 மின் மோட்டார்களை, சென்னை குடிநீர் வாரியம் பறிமுதல் செய்துள்ளது.
சென்னை தரமணி, ரங்கசாமி தெரு, அஞ்சுகம் அம்மாள் தெரு, ராணி அம்மாள் தெரு, பாரதியார் தெரு, கட்டபொம்மன் தெரு, தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அப்பகுதியில் உள்ள 520 குடியிருப்புகளுக்கு, குடிநீர் உறிஞ்ச மின் மோட்டார்கள் பயன்படுத்தக்கூடாது என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டிருந்த அழுத்தக் குறைபாடு சரிசெய்யப்பட்டதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
