/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச செஸ் தெலுங்கானா வீரர் முதலிடம்
/
ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச செஸ் தெலுங்கானா வீரர் முதலிடம்
ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச செஸ் தெலுங்கானா வீரர் முதலிடம்
ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச செஸ் தெலுங்கானா வீரர் முதலிடம்
ADDED : ஆக 06, 2024 12:52 AM

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 22வது மாநில ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச சுழல் முறை செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது.
இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட இப்போட்டியில், கடந்த மாதம் 29ல் துவங்கி நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
அதில், அனைத்து சுற்றுகள் முடிவில், தெலுங்கானா வீரர் ஆதிரெட்டி அர்ஜுன், 16, ஏழு புள்ளிகள் பெற்று, முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
இதனால், சர்வதேச மாஸ்டர் நெறியை பெற்றார். வெற்றி பெற்ற ஆதிரெட்டி அர்ஜுனுக்கு, 42,000 ரூபாய் மதிப்புள்ள, 500 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ரஷ்யாவின் சர்வதேச மாஸ்டர் அலெக்சாண்டர் மற்றும் தமிழக வீரர் ஹர்ஷத் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில செஸ் சங்கத்தின் செயலர் ஸ்டீபன், இந்தியாவின் சமீபத்திய கிராண்ட் மாஸ்டரான ஐ.சி.எப்., வீரர் ஷ்யாம் பரிசுகளை வழங்கினார்.
இன்று முதல் மூன்றாம் கட்ட போட்டிகள் துவங்குகின்றன. இதில், ஐந்து தமிழக வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் மோதுகின்றனர்.