/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாம்பன் கோவிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு
/
பாம்பன் கோவிலில் ஜூலை 12ல் குடமுழுக்கு
ADDED : ஜூன் 10, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் திருக்கோவிலில் பந்தக்கால் நட்டு, குடமுழுக்கு விழா பணி நேற்று துவங்கியது. இத்துடன், 15 லட்சம் ரூபாய் செலவில், ரதம் அமைக்கும் பணியும் துவங்கியது.
இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இக்கோவிலில், 66 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கும், 36 ஆண்டுக்குப் பின் பாலாலயமும் நடைபெற உள்ளது. குடமுழுக்கு, ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.