/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
/
பராமரிப்பின்றி பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
ADDED : மே 14, 2024 01:04 AM

வியாசர்பாடி, வியாசர்பாடியில், பல்வேறு வழக்குகளில் காவல் நிலையங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
திருட்டு, மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்கள், விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களும் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இவ்வாறு கைப்பற்றப்படும் இருசக்கர வாகனங்கள், பயன்பாட்டின்றி உள்ள பழைய வியாசர்பாடி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் பல ஆண்டுகளாக நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “வியாசர்பாடியில், குற்றம், விபத்து உள்ளிட்ட வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இவை வெயில், மழையில் பாழாகி வருகின்றன. அவற்றின் மீது செடி, கொடிகள் படர்ந்து முட்புதராக காட்சியளிக்கிறது. பறிமுதல் வாகனங்களை உரிய காலத்தில் ஏலத்தில் விட்டால், அரசுக்கு வருவாய் கிடைக்கும்,” என்றனர்.

