/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜனவரியில் ரூ.20 கோடியில் மின்விளக்கு மார்ச்சில் கும்மிருட்டானது நெடுஞ்சாலை
/
ஜனவரியில் ரூ.20 கோடியில் மின்விளக்கு மார்ச்சில் கும்மிருட்டானது நெடுஞ்சாலை
ஜனவரியில் ரூ.20 கோடியில் மின்விளக்கு மார்ச்சில் கும்மிருட்டானது நெடுஞ்சாலை
ஜனவரியில் ரூ.20 கோடியில் மின்விளக்கு மார்ச்சில் கும்மிருட்டானது நெடுஞ்சாலை
ADDED : ஏப் 04, 2024 12:35 AM
சென்னை, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துாரில் துவங்கும் சென்னை பை - பாஸ் சாலை, புழலில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இது 32 கி.மீ., துாரம் கொண்டது.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையை, அதிகளவில் விபத்து நடக்கும் சாலையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடையாளப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, 20 கோடி ரூபாய் செலவில், சாலை முழுதும் மின்விளக்குகள், கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது நொளம்பூர் முதல் அம்பத்துார் வரை, மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், உயர்மட்ட மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இச்சாலையில், குறைந்த துாரத்திற்குள் சூரப்பட்டு, வானகரம் ஆகிய இடங்களில், இந்த சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்க கட்டணம் வசூலிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சாலை பராமரிப்பு பணிகளும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட இச்சாலையை நிரந்தரமாக சீரமைப்பதற்கு 30 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது.
ஆனால், ஒப்பந்ததாரரை தேர்வு செய்து பணிகள் துவங்குவதில் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த சாலையில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை, வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

