/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் 'புட் கோர்ட்' எம்.கே.பி., நகரில் இடம் தேர்வு
/
வடசென்னையில் 'புட் கோர்ட்' எம்.கே.பி., நகரில் இடம் தேர்வு
வடசென்னையில் 'புட் கோர்ட்' எம்.கே.பி., நகரில் இடம் தேர்வு
வடசென்னையில் 'புட் கோர்ட்' எம்.கே.பி., நகரில் இடம் தேர்வு
ADDED : ஆக 18, 2024 12:27 AM
எம்.கே.பி.நகர், சென்னை மாநகராட்சியை அழகாக்கும் நடவடிக்கையாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, எம்.கே.பி.நகர், வடக்கு நிழற்சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இதில், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
அடுத்தக்கட்டமாக, வட சென்னையில் முதல் முறையாக, நடைபாதை வளாகத்தில் 'புட் கோர்ட்' என்ற உணவு கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக எம்.கே.பி., நகர் வடக்கு அவென்யூ சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த புட்கோர்ட், 150க்கும் மேற்பட்ட கடைகளுடன், 270 மீட்டர் நீளம் 14 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக அமைய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.