/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட சென்னை தி.மு.க., பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் களேபரம்
/
வட சென்னை தி.மு.க., பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் களேபரம்
வட சென்னை தி.மு.க., பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் களேபரம்
வட சென்னை தி.மு.க., பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் களேபரம்
ADDED : ஏப் 02, 2024 12:21 AM

திருவொற்றியூர், வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, நேற்று முன்தினம் மதியம், எண்ணுார், தாழங்குப்பம் சந்திப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாழங்குப்பம் வந்ததும், 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சிவகுமார், பிரசார வாகனத்தில் ஏற முயன்றார். 30க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு வந்து, 'கவுன்சிலர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை' எனக்கூறி, கட்சியினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அங்குள்ள பஜனை கோவிலுக்கு பொதுமக்களை அழைத்து சென்று பேச்சு நடத்தினர். அப்பிரச்னை குறித்து முடித்து, வாகனத்திற்கு திரும்பினர்.
பிரசார வாகனத்தில் ஏற முயன்றபோது, கவுன்சிலர் சிவகுமார் ஆதரவாளரான நெட்டுகுப்பத்தைச் சேர்ந்த சரவணன், 33, என்பவர், திருவொற்றியூர் மேற்கு பகுதி துணை தலைவர், தாழங்குப்பத்தைச் சேர்ந்த குமரன், 44, என்பவரை கையால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தாக்கினார். தகராறில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்தினர்.
தி.மு.க., வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று முன்தினம் இரவு, திரு.வி.க., நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.
திரு.வி.க., நகர் மார்க்கெட் மார்க்கெட் அருகே, அமைச்சர் சேகர்பாபு செல்வப்பெருந்தகையை வரவேற்றார். இப்பிரசாரத்தில் வேட்பாளர் பங்கேற்கவில்லை. இதனால் அப்செட் ஆன செல்வப்பெருந்தகை, சிறிது நேரத்தில் பிரசாரத்தை முடித்து கிளம்பினார்.

