/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் கால்வாயில் பாதாள சாக்கடை இணைப்பு பழைய பல்லாவரத்தில் அதிகாரிகள் அலட்சியம்

ADDED : மே 31, 2024 12:57 AM

பல்லாவரம் தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், பழைய பல்லாவரம், பெருமாள் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இப்பகுதியில், சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது.
இதற்கான காரணத்தை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யாமல், பெருமாள் நகர், 4வது பிரதான சாலைக்கான பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து, தனியாக ஒரு குழாய் அமைத்து, 5வது பிரதான சாலை வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் இணைத்துள்ளனர்.
பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போதெல்லாம், இந்த குழாய் வழியாக கழிவுநீர், மழைநீர் கால்வாயில் ஓடுகிறது.
இப்படி, வாரத்திற்கு இரண்டு முறை, மழைநீர் கால்வாயில், பாதாள சாக்கடை கழிவு கலக்கிறது. இதனால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை பன் மடங்கு பெருகிவிட்டது.
இதை, உயர் அதிகாரிகள், கண்டுக்கொள்வதாக இல்லை. இப்படியே போனால், அனைத்து மழைநீர் கால்வாய்களிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கும் வகையில், அத்துமீறல் நடக்கும்.
அதற்கு, இப்போதே, மாநகராட்சி கமிஷனர், முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.