/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.வெல் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் துவக்கம்
/
பி.வெல் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் துவக்கம்
ADDED : ஆக 15, 2024 12:13 AM
சென்னை,பி.வெல் மருத்துவமனை சார்பில், பி.வெல் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் துவக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, உயர்தர மருத்துவ கல்வியை வழங்குவதில், பி.வெல் மருத்துவமனையின் உறுதிப்பாட்டை, அதன் நிறுவனர் டாக்டர் சி.ஜே.வெற்றிவேல் எடுத்துரைத்தார்.
இந்திய மருத்துவம் சங்கத்துடன் இணைந்து, பி.வெல் அகாடமி அண்ணா நகர், தி.நகர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள பி.வெல் மருத்துவமனைகளில் இந்த கல்வியை வழங்குகிறது.
இது குறித்து பி.வெல் மருத்துவமனை நிறுவனர், டாக்டர் சி.ஜே.வெற்றிவேல் கூறியதாவது:
எங்களது இந்த முயற்சி மிக திறமையான மருத்துவ பணியாளர்களை உருவாக்குவதே. எங்கள் வகுப்பறையில், கல்வி மற்றும் அனுபவத்துடன் மாணவர்களை தயார்படுத்த உள்ளோம்.
மருத்துவம் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிநவீன மருத்துவ தொழிற்பயிற்சியும், திறனையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பி.வெல் அகாடமியில் சேர ஆர்வமுடையோர், www.bewellhospitals.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துவக்க விழாவில், மருத்துவமனை தலைமைச் செயல் அலுவலர் மகாலட்சுமி பாண்டியன், முதல்வர் ஷீஜா, மருத்துவ நிர்வாகி டாக்டர் அபிஷாந்த் பிரபு, ஆனந்த்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.