ADDED : ஆக 03, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, போக்குவரத்து நெரிசலை கருதி, சென்னையில் சாலை சந்திப்பில், 1973ல் முதன் முதலாக கட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்.
இப்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதால், 10.85 கோடி ரூபாயில் தமிழக அரசு புதுப்பித்தது.
செடிகள், ஒளிரும் மின் விளக்குகள், மக்கள் நடந்து செல்ல நடைபாதை, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதை நேற்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.