/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருமான வரி - தயாந்த் வீரன்ஸ் பிரீமியர் ஹாக்கியில் சமன் விளையாட்டு செய்திகள்

ADDED : செப் 06, 2024 12:45 AM
சென்னை,
திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி அமைப்பு சார்பில், மாவட்ட ஹாக்கி பிரீமியர் லீக் போட்டிகள், போரூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில் நடக்கின்றன.
இதில் தயாந்த் வீரன்ஸ், இந்தியன் வங்கி, பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த 'லீக்' போட்டியில், வருமான வரி மற்றும் தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. முடிவில், 1 - 1 என்ற கோல் கணக்கில், ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
நேற்று நடந்த ஆட்டத்தில், வருமான வரி மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணிகள் மோதின. இதில், 3 - 3 என்ற கணக்கில், போட்டி டிராவில் முடிந்தது.