/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவஸ்தை
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவஸ்தை
ADDED : மே 28, 2024 12:23 AM

ஆவடி புதிய ராணுவ சாலையில், ஆவடி அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. வாகன 'பார்க்கிங்' வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்கள் 'நோ பார்க்கிங்' பகுதியில் கண்டமேனிக்கு நிறுத்தப்படுகின்றன. இதனால், அவசர சேவை வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதை கண்காணிக்க பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் வெளிவாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனை நுழைவு சாலையும் மோசமாக காட்சி அளிக்கிறது. அங்கும் தேவையில்லாத வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- வினோத், ஆவடி.