ADDED : ஜூலை 30, 2024 12:31 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமம் கட்டணம், 500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், மாநகராட்சியிடம் பதிவு செய்வது அவசியம்.
அவ்வாறு பதிவு செய்பவர்கள், மாநகராட்சிக்கு பதிவுக் கட்டணம் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான கட்டணத்தை, மாநகராட்சி மாற்றியமைத்து உள்ளது.
அதன்படி, வணிக தன்மைக்கு ஏற்ப மாநகராட்சியில் புதிய கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
குறிப்பாக, 500 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணமானது, மிக சிறிய வணிகம் 3,500 ரூபாய்; சிறிய வணிகம் 7,000 ரூபாய்; நடுத்தர வணிகம் 10,000 ரூபாய்; பெரிய வணிகம் 15,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள தொழில் உரிமத்திற்கான கட்டணத்திற்கு, மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில், இன்று ஒப்புதல் பெறப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.