/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் குற்றங்கள் அதிகரிப்பு அரசு அதிகாரியிடம் மக்கள் புலம்பல்
/
பெரும்பாக்கத்தில் குற்றங்கள் அதிகரிப்பு அரசு அதிகாரியிடம் மக்கள் புலம்பல்
பெரும்பாக்கத்தில் குற்றங்கள் அதிகரிப்பு அரசு அதிகாரியிடம் மக்கள் புலம்பல்
பெரும்பாக்கத்தில் குற்றங்கள் அதிகரிப்பு அரசு அதிகாரியிடம் மக்கள் புலம்பல்
ADDED : மே 26, 2024 12:13 AM

சென்னை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் பரப்பில், 210 பிளாக்குகளில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் உடைய எட்டுமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
இங்கு, எட்டு பள்ளிகள், ஐ.டி.ஐ., கல்லுாரி உள்ளது. இங்குள்ள மக்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்கவில்லை என, பெண்ணுரிமை இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், அட்வகேட் கமிஷனராக இளங்கோ நியமிக்கப்பட்டார். இவர், பெரும்பாக்கம் குடியிருப்புகள், பள்ளி, கல்லுாரி, காவல் நிலையம், அரசு அலுவலகங்களில் நேற்று கள ஆய்வு செய்தார்.
அப்போது, பகுதிமக்கள், அட்வகேட் கமிஷனரிடம் கூறியதாவது:
குடிநீர், கழிவுநீர், குப்பை, கட்டடம் விரிசல், சாலை, பேருந்து வசதி போன்ற பிரச்னைகள், தீர்வு கிடைக்காமல் தொடர்கிறது.
ஒவ்வொரு பருவமழைக்கும் தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. மின் கட்டணத்தை முறையாக கணக்கீடு செய்யாமல், அபராதம் விதிக்கின்றனர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பாதிக்கிறது. மருத்துவமனையில் 24 மணி நேரம் டாக்டர்கள் இருப்பதில்லை. மின்துாக்கியில் சிக்கினால் மீட்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மாணவர்களிடம் கஞ்சா வியாபாரம் அமோகமாக நடக்கிறது. பள்ளி செல்லா மாணவர்கள் அதிகரிப்பதுடன், சிலரால் அவர்கள் தவறானவழி நடத்தப்படுகின்றனர். போலீசார் ரோந்து பணியில் இல்லாததால், சின்னச் சின்ன குற்றங்கள் அதிகரிக்கின்றன. சிறுமிகள், பெண்கள் குற்றங்கள் அதிகரிப்பதால், மகளிர் காவல் நிலையம் தேவை. ஏற்கனவே வசித்த பகுதிகளில் நிம்மதியாக இருந்தோம். இங்கு, அச்சத்துடன் வாழ்கிறோம். பெரும்பாலான பிரச்னைக்கு, துறைகள் ஒருங்கிணைந்து பணி செய்யாதது காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.