/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.50
/
மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.50
ADDED : மே 16, 2024 12:39 AM
சென்னை, சென்னை கோயம்பேடு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
வழக்கமாக ஏப்., மாதம் மாம்பழம் வரத்து களைகட்டும். நடப்பாண்டு, மாம்பழம் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், தற்போதுதான் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக, மார்க்கெட்டிற்கு மாம்பழ வரத்து அதிகரித்து உள்ளது. தினம் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. இதனால், மாம்பழம் விலை குறைந்து வருகிறது.
கிலோ பங்கனப்பள்ளி மாம்பழம் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜவாரி, அல்போன்ஸா, மல்கோவா உள்ளிட்ட மாம்பழங்கள் கிலோ 75 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.