ADDED : ஆக 26, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம் பெருங்களத்துாரில் வள்ளலார் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
வீடுகளில் புகுந்து உணவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவது, வளர்ப்பு பிராணிகளை கடிப்பது, குடியிருப்பு வாசிகளை மிரட்டுவது என, தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.
இப்பிரச்னை குறித்து, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையில் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

