/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாஸ்டிக் கவரில் உணவு குன்றத்துாரில் அதிகரிப்பு
/
பிளாஸ்டிக் கவரில் உணவு குன்றத்துாரில் அதிகரிப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:11 AM
குன்றத்துார், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. மண்ணில் மக்கும் தன்மையுள்ள வாழை, தாமரை இலைகள் மற்றும் பாக்கு மட்டை தட்டுகள், கோப்பைகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்திஉள்ளது.
இந்நிலையில், குன்றத்துார் தாலுகாவில் உள்ள 90 சதவீத உணவகங்களில் பாலிதீன் கவர்களில் சுட சுட உணவு பரிமாறப்படுகிறது. சிறு உணவகங்கள், பாஸ்ட் புட் கடைகள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்களில், பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது.
டீ கடைகளிலும், பாலிதீன் கவர்களில் டீ பார்சல் செய்து வாடிகையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு உடல் நலபாதிப்பு ஏற்படுவதோடு, பயன்பாட்டிற்கு பின் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் நீர்நிலைகளில் படிந்து சுற்று சூழல் மாசை ஏற்படுத்துகிறது.
உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.