ADDED : ஆக 29, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் நேற்று ரிப்பன் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூ., கட்சி மத்திய சென்னை மாவட்ட தலைவர் செல்வா தலைமை வகித்தார். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம், 28 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்யவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து, தர்ம பிரகாஷ் திருமண மண்டபத்தில் வைத்தனர். பிறகு மாலை விடுவித்தனர்.