/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீரடிக்கு மீண்டும் இண்டிகோ விமான சேவை
/
சீரடிக்கு மீண்டும் இண்டிகோ விமான சேவை
ADDED : ஆக 30, 2024 12:11 AM
சென்னை, சென்னை - சீரடி இரு மார்க்கத்திலும், தினசரி விமான சேவையை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனம் இயக்கி வந்தது.
கடந்த 2020ல் பரவிய கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த விமான சேவையை மீண்டும் துவக்க, இண்டிகோ நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சென்னையில் இருந்து சீரடிக்கு, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம், தினமும் விமானம் இயக்கி வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் பயணியர் வருகை குறைவு போன்ற காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
ஆன்மிக சுற்றுலாவிற்கு பயணியர் பலரும் சீரடிக்கு செல்வதால், கூடுதல் விமானங்களை சென்னையில் இருந்து இயக்க, கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சென்னை - சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:30 மணிக்கு சீரடிக்கு வந்தடையும்.
சீரடியில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:00 மணிக்கு சென்னை வந்தடையும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.