/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய தொழிற்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
/
அகில இந்திய தொழிற்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழிற்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழிற்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 11, 2024 12:14 AM
சென்னை, அகில இந்திய தொழிற்தேர்வில், தனித்தேர்வராக பங்கேற்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த ஆண்டு ஜூலையில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனித்தேர்வராக பங்கேற்க, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான விண்ணப்பத்தை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, உரிய ஆவணங்களுடன் வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம்.
இதற்குரிய முழு விபரம், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை இணையதளத்தில் உள்ளது. 18ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.