/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 மருத்துவமனைக்கு ரூ.30 கோடி கருவிகள் வழங்கிய 'இன்போசிஸ்'
/
2 மருத்துவமனைக்கு ரூ.30 கோடி கருவிகள் வழங்கிய 'இன்போசிஸ்'
2 மருத்துவமனைக்கு ரூ.30 கோடி கருவிகள் வழங்கிய 'இன்போசிஸ்'
2 மருத்துவமனைக்கு ரூ.30 கோடி கருவிகள் வழங்கிய 'இன்போசிஸ்'
ADDED : ஆக 05, 2024 12:52 AM
சென்னை, ''அரசு மருத்துவமனைகளுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கருவிகளை, 'இன்போசிஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில், 5.89 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும், பெற்றோர் மற்றும் உடனிருப்போர் தங்கும் விடுதி, உணவு தயாரிப்பு கூடம் ஆகிய பணிகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 25 படுக்கை வசதி, சமையலறை, கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் நான்கு தள கட்டடம் கட்டப்படுகிறது.
தரைத்தளத்தில், 100 பேர் உணவருந்த முடியும். அதேபோல், அரசு கஸ்துாரிபாய் பெண்கள் மகப்பேறு மருத்துவமனையில் 6.17 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த கட்டடப் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை, நாளை மறுநாள் அமைச்சர் உதயநிதி திறந்து வைக்க உள்ளார்.
சி.எஸ்.ஆர்., எனும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், இன்போசிஸ் நிறுவனம், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு, 10 கோடி ரூபாய்; கஸ்துாரிபாய் மருத்துவமனைக்கு 20 கோடி ரூபாய் என, மொத்தம் 30 கோடி ரூபாய்க்கான மருத்துவ கருவிகளை வழங்கி உள்ளது.
இதன் பயன்பாட்டையும், ராயப்பேட்டை மருத்துவமனையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக கருணாநிதி மாரத்தான் போட்டியில் கிடைத்த 3.42 கோடி ரூபாய், அரசு ஒதுக்கிய 6.85 கோடி ரூபாய் என,10.27 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களும், 35 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளையும், அமைச்சர் உதயநிதி நாளை மறுநாள் துவக்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.