தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வளர்ச்சி பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சி பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சி பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : ஆக 05, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 அண்ணா நகர்: துாய்மை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை, மாநகராட்சி மத்திய வட்டார துணை கமிஷனர் கவுசக் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அண்ணா நகர் மண்டலம், -95 வார்டுக்குட்பட்ட எம்.டி.எச். சாலையில் நடைபெறும் துாய்மை பணி, வீடுகளில் இருந்து ஈரக்கழிவு சேகரிப்பு, புஷ்பாஞ்சலி அடுக்குமாடி குடியிருப்பில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட பணிகளை, மத்திய வட்டா துணை கமிஷனர் கவுசிக் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், வில்லிவாக்கம் டி.வி.எஸ்., கால்வாயில் தடுப்புச்சுவர் உயர்த்தும் பணி, சிட்கோ நகர் அரசு மகளிர் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளி மேம்பாட்டு பணிகள், புதிதாக கட்டப்பட்ட சமூக நலக்கூடம் மற்றும் வில்லிவாக்கம் சட்டசபை அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

அப்போது, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலை மற்றும் தெருக்களில் தினசரி துாய்மை பணிகளை தீவிரப்படுத்தவும், அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கி, சமையலறையை சுத்தமாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, துணை கமிஷனர் அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us