தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரிக்கெட்டில் ஆர்வமா? டி.என்.சி.ஏ., அழைப்பு!

கிரிக்கெட்டில் ஆர்வமா? டி.என்.சி.ஏ., அழைப்பு!

கிரிக்கெட்டில் ஆர்வமா? டி.என்.சி.ஏ., அழைப்பு!


ADDED : ஏப் 21, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னையில் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, டி.என்.சி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.

டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிறுவருக்கான, 'சிட்டி யு - 12' தேர்வு போட்டியை நடத்துகிறது.

இதில், 2012 செப்., 1ம் தேதிக்கு பின் அல்லது 2014 ஆக., 31ம் தேதிக்கு முன் பிறந்த, 12 வயதுக்குட்பட்ட சென்னையில் வசிப்போர் மட்டும் பங்கேற்கலாம்.

போட்டித்தேர்வு, மே 3ல் துவங்கி, 6ம் தேதி வரை சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 'பி' திடலில் நடக்கிறது.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர், அதிகாரப்பூர்வமான www.tnca.in என்ற இணையதளத்தில், வரும் 26ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், ஆவண சரிபார்ப்புக்குப் பின், தேர்வு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என, டி.என்.சி.ஏ., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us