/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச செஸ் போட்டி தமிழகம், ரஷ்யா முன்னிலை
/
சர்வதேச செஸ் போட்டி தமிழகம், ரஷ்யா முன்னிலை
UPDATED : ஜூலை 25, 2024 06:09 AM
ADDED : ஜூலை 25, 2024 12:50 AM

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், தமிழக வீரர்கள், சர்வதேச மாஸ்டராவதற்கான 'நார்ம்ஸ் க்ளோஸ்டு' செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்து வருகிறது.
பொதுவாக, சதுரங்க ஆட்டத்தில், 'பிடே' விதிப்படி, ஒரு வீரர், சர்வதேச மாஸ்டர் எனும் தகுதியைப் பெற, 2,400 புள்ளிகளுடன், குறைந்தது மூன்று சர்வதேச மாஸ்டர்கள் அல்லது கிராண்ட் மாஸ்டர்களுடன் மோத வேண்டும்.
அதில் எடுக்கப்படும் புள்ளிகள் மற்றும் நார்ம்ஸ் அடிப்படையில், அவருக்கு சர்வதேச மாஸ்டர் அங்கீகாரம் கிடைக்கும்.
சென்னையில் நடந்து வரும் இப்போட்டியில், ஐந்து வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் என, மொத்தம் 10 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன், தமிழக வீரர்கள் மோதுகின்றனர்.
நேற்று நடந்த ஏழு சுற்றுகள் முடிவில், தமிழக வீரர் ஜி.அகாஷ், ரஷ்யா வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் தலா 3.5 புள்ளிகள் பெற்று, முதலிடத்தில் உள்ளனர்.
அவர்களை தொடர்ந்து, தமிழக வீரர்களான, ஆதிரெட்டி அர்ஜூன், மணிகண்டன் மற்றும் டில்லி வீரர் தேவீக் அத்வான் ஆகியோர், தலா 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளனர். போட்டிகள் தொடர்ந்து, 27ம் தேதி வரை நடக்கின்றன.