/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஜேப்பியார் வீரர் முன்னிலை
/
சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஜேப்பியார் வீரர் முன்னிலை
சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஜேப்பியார் வீரர் முன்னிலை
சர்வதேச ஓபன் செஸ் போட்டி ஜேப்பியார் வீரர் முன்னிலை
ADDED : மே 26, 2024 12:18 AM

சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலையில், சர்வதேச ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டி நடக்கிறது. போட்டியில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா வீரர்கள் உட்பட நாடு முழுதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
'ஓபன்' முறையில் நாளென்றுக்கு இரண்டு சுற்றுகள் விதம் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று மதியம் வரை, ஏழு சுற்றுகள் நிறைவடைந்தது. இதுவரை நடந்த ஏழு சுற்றுகளிலும், ஜேப்பியார் பல்கலை வீரர் ஹிரேன் வெற்றி பெற்று, 7:7 என்ற கணக்கில் முன்னிலையை தக்க வைத்துள்ளார்.
அவரை தொடர்ந்து, தமிழக வீரர் அஸ்வின் சாய்ராம், 6:7 புள்ளியிலும், மற்றொரு தமிழக வீரர் அஜீஸ் 6:7 புள்ளியிலும், ஜேப்பியார் மாணவன் ஆயுஷ் ரவிகுமார் 6:7 புள்ளியிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதேபோல், தெலுங்கானா வீரர் சுர்ஜன் மற்றும் ராணுவ வீரர் அஜய்குமார் ஆகியோரும் தலா ஆறு புள்ளிகளில் அடுத்தடுத்த இடங்களில் முன்னிலையில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.