/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் போலீசிடம் ரகளை செய்த கணவரிடம் விசாரணை
/
பெண் போலீசிடம் ரகளை செய்த கணவரிடம் விசாரணை
ADDED : செப் 10, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 10-
கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்த காவலர் மோனிஷா, 20, நேற்று முன்தினம் இரவு புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த அவரது கணவர் சலீம், 27, அவரது நண்பர் செல்வம் ஆகியோர் மோனிஷாவிடம் தகராறு செய்துள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மோனிஷா புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு எழும்பூர் போலீசார் வருவதற்குள், சலீமும் அவரது நண்பரும் அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
மோனிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில்ல, நேற்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

