/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கப்பாதையில் கழிவுநீர் போக்குவரத்திற்கு இடையூறு
/
சுரங்கப்பாதையில் கழிவுநீர் போக்குவரத்திற்கு இடையூறு
சுரங்கப்பாதையில் கழிவுநீர் போக்குவரத்திற்கு இடையூறு
சுரங்கப்பாதையில் கழிவுநீர் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : மே 30, 2024 12:18 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கு - கிழக்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், ரயில்வே தண்டவாளம் கீழ், அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் இணைப்பு சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, பலவீனமாக காட்சியளிக்கிறது. மேலும், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காமல், வெளிச்சம் போதுமான அளவில் இல்லை. இந்த நிலையில், சுரங்கப்பாதை தரைதளத்தில் இருந்து, கான்கிரீட் பெயர்ந்து கழிவுநீர் சுரக்கிறது.
இது பல ஆண்டுகால பிரச்னை. சமீபத்தில், ஊற்று நீர் சுரக்கும் இடம், திடீரென மேல் துாக்கி, போக்குவரத்துக்கு இடையூறானது. உடனடியாக மாநகராட்சியினர், இரும்பு தகரத்தை கொண்டு, நிலைமையை சரிசெய்தனர்.
இருப்பினும் பலன் இல்லை. தரைதளம் துாக்கியபடி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும், ஊற்று நீர் சுரப்பு அவ்வப்போது அதிகரிப்பதால், சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
- கே.கதிர்வேல், திருவொற்றியூர்.