/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடன் தொகை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல்
/
கடன் தொகை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 14, 2024 12:25 AM
சென்னை, மயிலாப்பூர், பல்லக்குமா நகரைச் சேர்ந்தவர் லெனின் பிரகாஷ், 40. இவர், தன் நண்பர் வாயிலாக அறிமுகமான கமல் என்பவருக்கு, 22 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால், கமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. லெனின் பிரகாஷ் பணத்தை கேட்டு கமலிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், 10ம் தேதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள டீக்கடையில் லெனின் பிரகாஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர் 'ஒழுங்கா கமல் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிவிடு' என கூறியது மட்டுமல்லாமல், கத்தியால் தாக்கி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
காயமடைந்த லெனின் பிரகாஷ், அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்த செந்தில், 44, என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பழைய குற்றவாளியான இவரை, நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.